மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் சேதுராமனுக்கு பிறந்த ஆண்குழந்தை…. அவரே மீண்டும் பிறந்திருப்பதாக குடும்பத்தினர் உருக்கம்!

912

நடிகர் சேது……….

மறைந்த நடிகர் சேது ராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை அறிந்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இளம் நடிகரான சேதுராமன் கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி இரவு திடீர் கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரைத்துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானர் சேதுராமன். தொடர்ந்து வாலிப ராஜா, சக்கப்போடு போடு ராஜா, 50 50 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான சேதுராமன் திரைத்துறைய சேர்ந்த பலருடனும் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தார். தோல் சிகிச்சை நிபுணரான சேதுராமன் சென்னை அண்ணா நகரில் Zi Clinic என்கிற தோல் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வந்தார்.


சேதுராமன் 2016ஆம் ஆண்டு திருமணம் உமையால் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு ஒன்றரை வயதில் சகானா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் இளம் மனைவியையும் குழந்தையையும் விட்டு சேது அகால மரணமடைந்தது பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

நாடு முழுக்க கொரோனா வைரஸால் பொது முடக்கம் அமலில் இருந்ததால் அவரது இறுதிச்சடங்கில் பலரும் பங்கேற்க முடியாமல் போனது. நடிகர் சந்தானம் தனது நண்பரான சேதுராமனின் உடலை கதறியப்படியே சுமந்து சென்றார்.

திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அவரது மனைவி உமையாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நடிகர் சேதுராமன் மரணமடைந்த போது அவரது மனைவி உமையால் கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மறைந்த நடிகர் சேது ராமனே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக அவரது குடும்பத்தினர் உருக்கமாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உமையாலுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஜாங்கிட் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மீண்டும் வந்து விட்டார்.. நீங்கள் உங்கள் வயதைதான் மாற்றியிருக்கிறீர்கள்.

நாங்கள் உங்களை குட்டி சேது என்றே அழைப்போம்.. அனைவருக்கும் வாழ்த்துகள்.. என பதிவிட்டுள்ளார். நடிகர் சேதுவுக்கு மகன் பிறந்த தகவலை அறிந்து ரசிகர்களும் சேதுவே மீண்டும் பிறந்து வந்திருப்பதாக கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.