மார்பகங்களின் அளவை குறைக்க பிரித்தானிய பெண் செய்த வினோத செயல்!!

484

பிரித்தானியாவில்…

பிரித்தானியாவில் பெண்ணொருவர் தனது மார்பகங்களின் அளவை குறைக்க நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தென்மேற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த ரொட்டி உற்பத்தியாளர் ஜாஸ்மின் மெக்லெட்சி (33).

இவருக்கு ஐந்து வயதில் பெண் பிள்ளை உள்ளது. தனது பெரிய மார்பகங்களால் ஜாஸ்மின் பல உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்.

தூங்குவதில் பிரச்சனை தொடங்கி, புண்கள் மற்றும் வெடிப்புகள் ஏற்படுவதால் உள்ளாடை அணிவதில் சிக்கல்கள் உள்ளதாக கூறும் ஜாஸ்மின், மன அழுத்தம் ஏற்படுவதாவும் வேதனை தெரிவித்துள்ளார்.


மேலும், முதுகுவலி பிரச்சனையும் இருப்பதால் மார்பகக் குறைப்பு அறுவை சிகிச்சை மூலம் இதற்கு தீர்வு கிடைக்கும் என மருத்துவர்கள் தன்னிடம் நீண்ட காலமாக கூறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டும் பணியில் ஜாஸ்மின் ஈடுபட்டு வருகிறார். இதுகுறித்து ஜாஸ்மின் கூறுகையில், ‘அது நான் இல்லை என்று நினைக்கிறேன்.

என்னை பொருட்காட்சியாக காட்ட விரும்பவில்லை. எனது உடலை நான் சிறப்பாக மாற்ற முயல்கிறேன். உடலை காட்டி அதன் மூலம் பணம் ஈட்ட நான் விரும்பவில்லை’ என தெரிவித்துள்ளார்.

பள்ளியில் படிக்கும்போதே சக மாணவ, மாணவிகளின் கிண்டலுக்கு ஆளானதால் மன வருத்தத்தில் முடங்கியதாகவும் அவர் வேதனையுடன் கூறினார்.