மாறி மாறி டார்ச்சர் கொடுத்த காதலன், கணவன்.. விரக்தியில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

266

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பலோட் பகுதியில் வசித்து வருபவர் அபிஜித் தேவன். இவரும் இந்துஜா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

இருவரும் வீட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 6ம் தேதி இந்துஜா அவருடன் மதிய உணவு சாப்பிட்டார்.

அதன் பிறகு இந்துஜா அறையை விட்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, அபிஜித் தேவன் அறைக்கு சென்று பார்த்தபோது, ​​மனைவி ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இந்துஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இந்துஜா இறப்பதற்கு முன் தாக்கப்பட்டதில் காயம் அடைந்ததாகத் தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அபிஜித் தேவனை காதலிப்பதற்கு முன்பு, இந்துஜா அஜாஸை காதலித்து வந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இந்துஜா அஜாஸை பிரிந்தார்.


இதையடுத்து இந்துஜா அபிஜித்தை திருமணம் செய்து கொண்டு அஜாஸிடம் பேசினார். தற்கொலை செய்து கொள்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன், அஜாஸ் இந்துஜாவை தனது காரில் சங்குமுக் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு இந்துஜாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறி அஜாஸ் அவரை தாக்கினார். இந்துஜாவை பழிவாங்க நடந்ததையும் அபிஜித்திடம் கூறினார். இதனால், இந்துஜாவையும் அபிஜித் அடித்துள்ளார்.

காதலன் மற்றும் கணவர் கொடுத்த மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிஜித் தேவன், அஜாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.