கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் அருகே உள்ள தெற்கு அண்ணார பாகம் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது முகமது நிஷால் பிரபல யூடியூபரான இவருக்கும்,
எர்ணாகுளத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.
ஒரு கட்டத்தில் இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி தனியாக வரவழைத்து ஆபாச புகைப்படம் எடுத்திருக்கிறார்.
ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி இளம்பெண்ணை முகமது நிஷால் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்த அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இளம்பெண்ணை மிரட்டி முகமது நிஷால் பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் யூடியூபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.