மீண்டும் சர்ச்சையில் டிடிஎஃப் வாசன்.. பாம்பைக் கையில் பிடித்து வீடியோ வெளியீடு!!

45

மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் பிரபல யூ-ட்யூபர் டிடிஎஃப் வாசன். இம்முறை கையில் பாம்பைக் கையில் பிடித்து வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி விலகியது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வந்த டிடிஎஃப் வாசன் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

இந்த வரிசையில் தற்போது பாம்பு ஒன்றை கையில் சுற்றியபடி யூ-ட்யூபில் வீடியோ வெளியிட்டிருக்கிறார் டிடிஎஃப் வாசன்.

இரண்டு வயதாகும் அந்த பாம்பிற்கு பப்பி எனப் பெயரிட்டுள்ளதாகவும் மகராஷ்டிரா வனப்பகுதியில் இருந்து கொண்டு வந்ததாகவும் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கையில் கட்டியிருக்கும் அந்த பாம்பிற்கு முத்தமிட்டு செல்லம் கொஞ்சுபவர் அந்த பாம்பிற்கு தானே தாய், தந்தையாக இருந்து பாதுகாப்பு கொடுப்பேன் எனவும் பேசி பகீர் கிளப்பியிருக்கிறார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.