மீன் பிடிக்க சென்ற நபர்.. ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆன அதிசயம்!!

224

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானைச் சேர்ந்த மீனவர் ஒருவர் அரிய வகை மீன்களை பிடித்து விற்றதில் ஒரே இரவில் கோடீஸ்வரரானார். கராச்சியின் Ibrahim Hyderi மீன்பிடி கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஹாஜி பலோச். இவர் தனது தொழில் நண்பர்களுடன் அரபிக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார்.

அவரது வலையில் சிக்கிய மீன்களை ஆராய்ந்தபோது அவை ”சோவா” என அழைக்கப்படும் அரிய வகை மீன்கள் ஆகும். இவற்றை தங்க மீன்கள் என்றும் கூறலாம். 20 முதல் 40 கிலோ எடை கொண்ட சோவா மீன் 1.5 மீற்றர் நீளம் வரை வளரக்கூடியது.

கிழக்கு நாடுகளில் அதிகம் விரும்பப்படும் இந்த வகை மீனில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அத்துடன் விலைமதிப்பற்றதாகவும், அரிதாகவும் காணப்படும் இந்த மீன் வயிற்றில் உள்ள பொருட்கள் பல நோய்களை குணப்படுத்தும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மீனவர் ஹாஜி அரிய வகை மீன்களை கராச்சி துறைமுகத்தில் ஏலத்தில் விட்டார்.


அதன் முடிவில் அவருக்கு 7 கோடி ரூபாய் கிடைத்தது.குறிப்பாக அதில் ஒரு மீன் மட்டுமே ரூ.70 லட்சத்திற்கு ஏலம் போனது. இதன்மூலம் சாதாரண மீனவராக இருந்த ஹாஜி ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். எனினும் அவர் தனக்கு மட்டும் அந்த பணத்தை வைத்திருக்காமல் தனது குழுவினருக்கும் பகிர்ந்து கொடுப்பதாக கூறினார்.