கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தெற்கு பகுதியில் சுப்பிரமணிய நகர் என்ற இடம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது இளைஞரான ஜெய்சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார்.
இவர் வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மார்ச் மாதத்தில் தன்னுடைய உறவினர்களை பார்ப்பதற்காக இவர் மும்பை மாநகருக்கு சென்றுள்ளார்.
சென்ற வியாழக்கிழமை தான் இவர் மும்பையிலிருந்து எச்.எஸ்.ஆர் 4-ஆம் பிரிவு அரசு விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் தனிமைப்படுத்தும் மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட வையத்தில் இயங்கி வரும் பொதுவான குளியலறைக்கு அருகே 30 வயது பெண்ணை பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி மற்றொரு அறையில் தங்கி வந்த 22 வயது இளம் பெண்ணையும் அவருடைய அறையிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 30 வயது பெண் தெற்கு பெங்களூரில் லேஅவுட் காவல்நிலையத்தில் நடந்தவற்றை கூறி புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஜெய்சங்கரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருடைய மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவர் அதே காவல்நிலையத்தில் ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டு கிடப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவமானது பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.