ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தை இல்லாததால் அவரை விவாகரத்து செய்த பழனிசாமி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மரகதம் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 20ம் தேதி காலை வழக்கம் போல் பழனிசாமியின் மனைவி மரகதம் காபி கொண்டு வந்தார். அப்போது பழனிசாமி உடல் கருகி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், பிரேதப் பரிசோதனையில் பழனிசாமி 5க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்பட்டு, பின்னர் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது.
சந்தேகத்தின் அடிப்படையில், பழனிசாமியின் மனைவியின் சகோதரரான ஈரோடு முருங்கக்காட்டு கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி மனைவி மாசிலாமணி (35) என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இத்ல் அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தமிழன்(36), தங்கமணியுடன் நூல் ஆலையில் வேலை பார்த்து வந்தவர். இவர் மாசிலாமணி வீட்டின் அருகே வாடகைக்கு வீடு எடுத்து மனைவி மற்றும் குழந்தைகளுடன் தங்கி இருந்தார்.
அப்போது மாசிலாமணிக்கும்ம் தமிழனுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழன் வாங்கிய கடனை அடைக்க, தன் மகளுக்காக வைத்திருந்த, 10 பவுன் நகை மற்றும் பணத்தை, மாசிலாமணி கொடுத்தார்.
இதற்கிடையில் மாசிலாமணியின் மகள் பருவ வயதை அடைந்ததும் தங்கமணி பூபுனித நீராட்டு விழாவை நடத்த ஆயத்தமானார். இதனால், கடனாகப் பெற்ற நகை, பணத்தை மாசிலாமணி கள்ளக்காதலனிடம் கேட்டுள்ளார்.
மாசிலாமணியும் கள்ளக்காதலன் தமிழனும் தங்கமணியின் சகோதரியின் கணவர் பழனிச்சாமியைக் கொல்லத் திட்டமிட்டனர். ஏன் என்றால் உறவினர் இறந்தால் மட்டுமே விழாவைத் தள்ளிப்போடத் திட்டமிடுவார்கள் என்பதால்.
இதையடுத்து, கடந்த 19ம் தேதி இரவு, பெருந்துறையில் உள்ள தனது வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பழனிசாமி, வெட்டிக்கொலை செய்யப்பட்டு, உடலில் தீ வைத்து எரிக்கப்பட்டார்.
பிறகு, எதுவும் தெரியாதது போல் நடித்துள்ளனர். இந்தக் கொலைக்கு மாசிலாமணியின் 17 வயது மகனும் உடந்தையாக இருந்துள்ளார். அதனால் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.