நோய்க்கிருமி…
நீந்தும்போது மூக்கு வழியாக மூளைக்குள் நுழையும் ஒரு நோய்க்கிருமி சிறுவன் ஒருவனின் வாழ்க்கையையே முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது.
ப்ளோரிடாவைச் சேர்ந்த Tanner Lake Wall (13) குடும்பத்துடன் விடுமுறையை செலவிட சென்றிருந்தபோது, ஒரு தீம் பார்க் மற்றும் ஏரியில் விளையாடி மகிழ்ந்துள்ளான். வீடு திரும்பி இரண்டு நாட்களுக்குள் அவனுக்கு தலை சுற்றல், வாந்தி மற்றும் கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு அவனை கொண்டு சென்றபோது, அந்த மருத்துவமனையில் அவனுக்கு தொண்டை அழற்சி ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்கள். ஆனால், மகன் இருந்த நிலையைக் கண்ட பெற்றோர் Travis மற்றும் Aliciaவுக்கு, அது நிச்சயம் தொண்டை அழற்சி அல்ல, அல்ல வேறு ஏதோ பெரிய பிரச்சினை என்று தோன்ற, அந்த மருத்துவமனையிலிருந்து அவனை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
அங்குதான் மருத்துவர்கள் Tannerஐ தாக்கியுள்ளது அமீபா என்னும் ஒரு கிருமி, அதுவும் மூக்கு வழியாக நுழைந்து மூளைக்குள் சென்று மூளையையே சாப்பிட்டு விடும் Naegleria fowleri எனும் கிருமி, இந்த நோய்க்கு மருந்தே கிடையாது என்று கூறியிருக்கிறார்கள்.
அத்துடன் சரியாக கிருமிநீக்கம் செய்யப்படாத நீச்சல் குளம் முதலான இடங்களில் இந்த வகை கிருமி இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
என்னடா, சுற்றுலாவுக்கு சென்றது ஒரு தவறா, நீச்சலடிப்பதில் இப்படி ஒரு பிரச்சினையா என நொந்துபோன Tannerஇன் பெற்றோர், மற்றவர்களுக்கு இப்படி ஒரு பிரச்சினை இருப்பதைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.
சோகமான விடயம் என்னவென்றால், Tannerஇன் மூளை முற்றிலுமாக செயலிழந்ததை அடுத்து, ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி அவனுக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட, இளம் வயதிலேயே பெற்றோரை அநாதரவாக விட்டுச் சென்றுள்ளான் Tanner.