மூன்றாவது திருமணத்துக்கு தயாரான பிக்பாஸ் வனிதா இந்த மாதத்திலேயே திருமணம் தேதி பெயர் விபரங்களை அறிவித்த வனிதா!!

1092

தளபதி விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தான் வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரலேகா படத்திற்கு பிறகு ஹீரோயினாக அவர் வலம் வரவில்லை.
ஹீரோயினாக இவரை தெரிந்ததை விட கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மக்களுக்கு வரை அதிகமாக தெரியவந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தைரியமான பெண் என பிரபலமானார்.வனிதா கடந்த 2000ம் ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் ஒரு மகன் மற்றும் மகளை பெற்றெடுத்தார். பின்னர் 2007 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.

வனிதா தன் முதல் கணவருடன்

அதன் பிறகு அதே ஆண்டில் ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்த் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் பிறந்தார்.


மூன்று வருடம் மட்டுமே நீடித்த அந்த வாழ்க்கை 2010 ஆம் ஆண்டு விவாகரத்துடன் முடிவடைந்தது.பின்னர் பிரபல நடன இயக்குனர் ராபர்ட் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாகவும் செய்திகள் உள்ளது.

நடிகர் சிம்புவுக்கு நெருக்கமான நண்பர் ராபர்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வனிதா தன் இரண்டாவது கணவருடன்

தற்போது மீண்டும் திருமணத்தில் ஆர்வம் கொண்டுள்ள வனிதா இந்த மாத இறுதியில் தனது நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வனிதாவுக்கு நெருக்கமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் இந்த கல்யாணத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.