சீனாவின் வூகான் மாகாணத்தில் உணவகத்தில் வாங்கிய சூப்பில் இறந்து கிடந்த வௌவாலைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சீனாவின் வூகான் மாகாணத்தை சேர்ந்தவர் சென். அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் குளிரூட்டப்பட்ட பன்றி சூப்பை வாங்கிவந்துள்ளார்.
முதல் நாள் மற்றும் இரண்டாம் நாள் அதனை சாப்பிட்டுள்ளார். மூன்றாவது நாள் தன் குடும்பத்தினருடன் சேர்ந்து அந்த சூப்பை சாப்பிட முடிவெடுத்துள்ளார் சென். அவரது மனைவியடம் கொடுத்து அந்த சூப்பை சூடுபடுத்தக்கூறியுள்ளர்.
அதனை அடுத்து, அவரது மனைவி அந்த சூப்பை அடுப்பில் வைத்து கிளறியபோது கறுப்பு நிறத்தில் ஏதோ ஒன்று இருப்பதுபோல் தென்பட்டுள்ளது. பின்னர், உணவு சாப்பிடும் சாப்ஸ்டிக்கை வைத்து கிளறியதில் அது சிறிய வௌவால் என்பது தெரியவந்துள்ளது.
அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த குடும்பத்தினர் இதுகுறித்து அந்த உணவக உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் தரப்பில் இருந்து இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வௌவால்கள் பொதுவாக இரவு நேரத்தில் தான் அங்குமிங்கும் உலாவும் எனவும் தாங்கள் பகல் நேரத்தில் அந்த சூப்பை தயாரித்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த குடும்பத்தினரின் வீட்டில்தான் வௌவால் சூப்பில் விழுந்திருக்ககூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சம் காரணமாக சென் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதியாகியு்ளளது. தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.