மூளையை வறுத்து சாப்பிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கொலையாளி : விசாரணையில் அதிர்ச்சி!!

252

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்னின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த இளைஞர், விசாரணையின் போது அதிர்ச்சி தகவல்களை கூறியுள்ளார்.

சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு அருகே துர்நாற்றம் வீசிய சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. மேலும் அதில் இருந்து ரத்தம் வழிந்தோடியதால் அங்கிருந்த பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்த போது அதில் பெண் ஒருவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி அடைக்கப்பட்டிருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிஸார் பெண்ணின் உடலைக் கைப்பற்றி சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர.

பின்னர் பொலிஸார் விசாரணையின் போது, சென்னை மாதவரத்தை சேர்ந்த 32 வயதான தீபா என்ற பெண்ணை கொலை செய்திருப்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக காணாமல் போனதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியில் வசித்து வரும் மணிகண்டன் என்ற இளைஞர் சூட்கேஸை வீசி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டனின் வீட்டிற்கு சென்ற பொலிஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளாக துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.

இவரது அக்கா கடந்த 16 -ம் திகதி திருவையாறு சென்ற நிலையில் மாதவரம் பகுதியை சேர்ந்த தீபாவை தன்னுடன் மூன்று நாட்கள் தனியாக இருக்க அழைத்துள்ளார். அதற்காக ரூ.18000 பணம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர், மூன்று நாட்கள் கழித்து ரூ.12000 பணம் மட்டுமே மணிகண்டன் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு வந்துள்ளது.

பின்னர் ஆத்திரத்தில் தீபாவின் தலையில் சுத்தியலை வைத்து அடித்துள்ளார். இதனால், சம்பவ இடத்திலேயே தீபா உயிரிழந்துள்ளார். பின்னர், சூட்கேஸ் ஒன்றை வாங்கி உடலை துண்டு துண்டாக வெட்டி அதில் வைத்து கட்டுமானம் நடைபெறும் பகுதியில் அதனை வீசியுள்ளார்.

இதில் மற்றொரு அதிர்ச்சி என்னவென்றால், பெண்னின் மூளையை வறுத்து சாப்பிட்டதாகவும் கொலையாளி கூறியுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனை கேட்ட பொலிஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.