மேடிட்ட வயிற்றை படம் பிடிக்க முயன்ற கர்ப்பிணி… திடீரென தோன்றிய மர்ம உருவம் ஏற்படுத்திய திகில்!

1151

பிரித்தானியாவில் தனது மேடிட்ட வயிற்றை படம் பிடிக்க முயன்ற கர்ப்பிணிப்பெண் ஒருவர் வீடியோவில் ஒரு ஒரு மர்ம உருவம் தோன்ற, திகிலடைந்துள்ளார்.

தனது வயிற்றிலிருந்த குழந்தை நகர்வதை தன் கணவனுக்கு காட்டுவதற்காக அதை வீடியோ எடுக்க முயன்றுள்ளார் அந்த பெண்.

அப்போது திடீரென ஒரு உருவம் தோன்றி மறைய, உடலெல்லாம் பயத்தில் ஒரு கணம் புல்லரித்துப்போனது என்கிறார் அவர்.

வெளியாகியுள்ள அந்த வீடியோவின் முடிவில் திடீரென அந்த உருவம் தோன்றி மறைவதைக் காணலாம்.


அவரது சகோதரி இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ய, அதைப் பார்த்தவர்கள் அவருக்கு வேறு குழந்தைகள் இருக்கிறார்களா என கேட்டுள்ளார்கள்.

அதற்கு அவர், அவளுக்கு வேறு குழந்தைகளும் இல்லை, அவளது நாயும் பூனையும் கூட கருப்பில்லை, வெள்ளை நிறம்தான் என்று கூறியுள்ளார்.

வீடியோவைப் பார்த்த பலரும், அது தங்களுக்கு ஒரு எதிர்மறை உணர்வை தோற்றுவித்தது எனவும், அதைப் பார்த்தபின் தங்களால் தூங்கமுடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.