கோவிந்த் மற்றும் சரிதா தம்பதியினர் உத்தரபிரதேச மாநிலம் கன்னியா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையில், சரிதாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததாக தெரிகிறது.
சரிதா அடிக்கடி அந்த நபரிடம் செல்போனில் பேசினார். சம்பவம் நடந்த அன்று, கணவன் மனைவி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்த், தனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார்.
அதன் பிறகு, அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தாய், தந்தை இறந்ததை அறியாமல் 5 வயது மகள் அழுதுகொண்டே நின்றிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.