யாழ்.இளம் பொலிஸ் உத்தியோகத்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் இதுவா?

1081

தேசிய புலனாய்வுத்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனக்குத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இச்சம்பவம் வெள்ளிக்கிழமை (19) மாலை 7 மணியளவில் அம்பாறை – கல்முனை பொலிஸ் நிலையத்தில் உள்ள அரச புலனாய்வு பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இத் துப்பாக்கி சூட்டில் மரணமானவர் யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் மத்தி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கே.கமலராஜ் என்ற அரச புலனாய்வு உத்தியோகத்தராவார்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ள தேசிய புலனாய்வு பிரிவு காரியாலயத்தில் கடமையாற்றிவரும் குறித்த உத்தியோகத்தர் சம்பவதினமான நேற்று மாலை 6.30 மணியளவில் காரியாலயத்தில் தனிமையில் இருந்துள்ள நிலையில் பாதுகாப்புக்காக வைத்திருந்து (பிஸ்டல்) கைதுப்பாக்கியால் தனக்கு தானே தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.


குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை இடம்பெற்று வருவதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விருதொன்றையும் பெற்றுள்ளார்.

காதல் விவகாரம் காரணமாக இந்த தற்கொலை இடம்பெற்றதாக செய்திகள் வெளியாகின்ற போதும், பொலிசார் இதுவரை உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.