ரஷ்ய அழகிப்பட்டம் பெற்ற இளம்பெண் திடீரென கத்தியால் தாக்கியதால் பரபரப்பு: வெளியான வீடியோ!!

890

ரஷ்ய….

அழகிப்பட்டம் பெற்ற இளம்பெண் ஒருவர், ரஷ்யாவிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பணியாற்றும் பெண் ஒருவரை திடீரென கத்தியால் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Natalya Dolganovskaya (32), 2005ஆம் ஆண்டு Miss Ulyanovsk பட்டம் பெற்றவர், மட்டுமல்ல உள்ளூரில் பிரபல மொடலும் ஆவர்.

சமீபத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு சென்றிருந்த Natalya, திடீரென, நான் பெண்களை வெறுக்கிறேன் என கத்தியபடி அங்கிருந்த பணியாளரான 36 வயது பெண் ஒருவரை கத்தியால் குத்தத் துவங்கினார்.

அருகிலிருந்த மற்றொரு பெண் மற்றவர்களை உதவிக்கு அழைப்பதற்குள் அந்த பெண்ணுக்கு தலை, முகம், கழுத்து, கைகள் மற்றும் முதுகெலும்பில் கத்திக்குத்து விழுந்திருந்தது.


சத்தம் கேட்டு ஓடி வந்த ஒரு பெண் கத்தியை பிடுங்க, மற்றவர்கள் ஆம்புலன்சை அழைத்தனர்.

அதற்குள் Natalya அங்கிருந்து வெளியேறியிருந்தார். கத்தியால் குத்தப்பட்ட பெண்ணுக்கு காயங்கள் அதிகம் என்றாலும், அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லை, மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிது நேரத்திற்குள் பொலிசார் Natalyaவைக் கைது செய்துவிட்டனர். இதற்கிடையில் Natalya குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் 18 வயதாக இருக்கும்போது அழகிப்பட்டம் பெற்றுள்ளார்.

அழகிப்பட்டம் பெற்றதுமே உள்ளூர் பிரபலமும், அரசியல்வாதியுமான Vadim Dolganovsky என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஆனால், ஆறு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத நிலையில் இருவரும் பிரிந்துவிட்டிருக்கின்றனர்.

Vadim Dolganovsky மீண்டும் திருமணம் செய்துகொண்டு ஒரு புது வாழ்க்கையைத் தொடங்கிவிட, மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் திணறியுள்ளார் Natalya. பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.