ரூ 2000 கடனைத் திருப்பிக் கேட்டதில் இளைஞர் குத்திக் கொலை!!

139

சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற நிலையில், தீபாவளி பண்டிகையை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக கடந்த வாரம் விடுமுறையில் தமிழகம் வந்த இளைஞர்,

தான் முன்பு கடனாக கொடுத்திருந்த ரூ.2,000 திருப்பிக் கேட்டதில் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள பெரிய மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு கடந்த வருடம் ரூ.2,000 கடனாக கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கோடீஸ்வரன், வேலைக்காக சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், தன்னுடைய தம்பி முறை உறவினரான கிருபாகருடன் பேசிக் கொண்டிருந்த போது மணிகண்டன் குறித்த பேச்சு வந்ததில், தான் ரூ.2,000 கடன் கொடுத்தது பற்றி தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மணிகண்டனும், கிருபாகரனும் வேறு சில நண்பர்களும் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கையில் தனது அண்ணனுக்கு தர வேண்டிய ரூ.2,000 கடனை கிருபாகரன் கேட்டுள்ளார். அப்போது தகராறு ஏற்பட்ட நிலையில் இது குறித்துட் ஹனது அண்ணன் கோடீஸ்வரனின் கூறியுள்ளார்.


இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று போதையில் இருந்த மணிகண்டனிடம் கோடீஸ்வரன் ரூ.2,000 கடனை திருப்பிக் கேட்டதால் தகராறு ஏற்பட்டதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டன்

கோடீஸ்வரனை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்த கோடீஸ்வரன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலறிறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கோடீஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு தப்பியோடிய மணிகண்டனைத் தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் உடனிருந்த 3 பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தீபாவளிக்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் இளைஞர் ரூ.2,000 கடனுக்காக கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.