லண்டனில் குத்தி கொல்லப்பட்ட இலங்கை இளைஞன்! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள நீதிமன்றம்.. முழு தகவல்!!

1008

லண்டனில் இலங்கை இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாக கொண்டTashan Daniel (20) என்ற இளைஞன் கால் பந்து போட்டி ஒன்றை காண்பதற்காக செல்லும் வழியில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி லண்டனின் Hillingdon சுரங்க ரயில் நிலையத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவத்தில் Alex Lanning (22) மற்றும் Camille ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது.


இதையடுத்து Alex Lanningக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி குறைந்தபட்சம் அவர் 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க உத்தரவிட்டார்.

இதோடு Camilleக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்கு பின்னர் நீதிபதி மார்க் டென்னிஸ் கூறுகையில், இந்த சம்பவம் வன்முறையை காட்டுகிறது,

இதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

நீங்கள் இருவரும் ஒப்பீட்டளவில் இளைஞர்கள், இருப்பினும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளும் அளவுக்கு முதிர்ச்சியடைந்திருக்கிறீர்கள் என கூறியுள்ளார்.