லண்டனில் பட்டபகலில் குத்தி கொல்லப்பட்ட இளைஞன் இவர் தான்! புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்!!

367

லண்டனில் பொது மக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த இளைஞனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் ஆக்ஸ்போர்டு சாலையில் பரபரப்பாக இயங்கும் சந்தைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணியளவில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

குற்றுயிராக மீட்கப்பட்ட அந்த இளைஞர், உயிரிழந்துவிட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உயிரிழந்த இளைஞனின் பெயர் Jeremy Menesses எனவும் 17 வயது மதிக்கத்தக்க இவர் தெற்கு லண்டனைச் சேர்ந்தவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.


மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக குறித்த இளைஞன் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் உயிரிழந்துவிட்டான்.

அவரின் பிரேதபரிசோதனை உரிய நேரத்தில் செய்யப்படும் என்று தெரிவித்துள்ள பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக 18 வயது மதிக்கத்தக்க மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

துப்பறியும் தலைமை ஆய்வாளர் Katherine Good, இந்த சம்பவம் பல ஆண்களுக்கிடையே நடந்த சண்டையில் நடந்துள்ளது. பட்டப்பகலில் நடந்துள்ளதால், நாங்கள் பலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம். இருப்பினும் இது தொடர்பாக புகைப்படமோ அல்லது வீடியோ யாரேனும் எடுத்திருந்தால், அது எங்களுக்கு தேவை.

இந்த கொடூரமான சம்பவத்தை நாங்கள் விசாரிக்கும்போது, அது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த இளைஞனுக்கு நண்பர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது நண்பர்கள் சிலர் அவரை அப்பாவி என்று கூறினர்.

பெயர் குறிப்பிட விரும்பாத நண்பர் ஒருவர், அவர் வெறும் அப்பாவி. நேற்று என்ன நடந்தது என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது, ஆனால் அவர் ஒரு அப்பாவி நபர். நாங்கள் அனைவரும் அவருடைய நண்பர்கள், நாங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த விரும்பினோம்.

குழுவில் இருந்த மற்றொரு பெண் , அவர் அக்கறை காட்டியது எல்லாம் அம்மா மீது மட்டுமே, இப்படி ஒரு நிலை அவருக்கு நேர்ந்தது என்று எங்களால் நம்ப முடியவில்லை. அவர் குற்றமற்றவர், அவர் ஒரு நல்ல மனிதர், அம்மா மீது அதிக பாசம் கொண்ட நபர் என்று கூறியுள்ளார்.