அமேசான் நிறுவனம்…………
ஆன்லைன் வணிகத்தில் கலக்கி வரும் அமேசான் நிறுவனம், லண்டனில் 7,000 நிரந்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வீடு தேடி விநியோகம் செய்யும் அமேசான் நிறுவனம், உலகின் பல்வேறு நாடுகளில் தனது கிளையை நிறுவியுள்ளது. அந்தவகையில் தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நகரில் இந்த ஆண்டு இறுதிக்குள் 7,000 நிரந்தரப் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
கிடங்குகள், பொருட்கள் பிரித்துவைக்கும் மையங்கள், விநியோகம் செய்யும் நிலையங்கள், அலுவலகப் பணி போன்றவற்றிற்காக 3,000 புதிய பணியாளர்கள் ஏற்னகவே நியமனம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பிரித்தானியாவில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள், வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பல்வேறு தொழிலாளர்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். மேலும் அரசாங்க ஊதியக் குறைப்பு மேலும் வேலைவாய்ப்பின்மையை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியாகவே பார்க்கப்படுகிறது.