லண்டனுக்கு குடிபெயர்ந்த ஏழ்மை நிலையில் இருந்த 18 வயது மாணவி! பணமில்லாமல் தவித்தவருக்கு இன்ப அதிர்ச்சி.. என்ன தெரியுமா?

348

லண்டனில் வசிக்கும் 18 வயது மாணவி தனது கல்வி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில் அந்த பணத்தை அமெரிக்க பாடகி செலுத்தியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vitoria Mario என்ற 18 வயது மாணவி போர்சுகலில் இருந்து லண்டனுக்கு கடந்த 2016ல் குடிபெயர்ந்தார். படிப்பில் சிறந்து விளங்கிய Vitoriaவுக்கு தற்போது University of Warwickல் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் கல்வி கட்டணத்தை அவரால் செலுத்த இயலவில்லை, மேலும் தங்குமிடம், மடிக்கணினி, பாடப்புத்தகங்கள் மற்றும் பொது வாழ்க்கை செலவுகளுக்கும் பணமில்லாமல் தவித்தார்.

ஏனெனில் Vitoriaவின் தந்தை இறந்துவிட்ட நிலையில் தாயார் போர்சுகலில் இருந்தார். இதையடுத்து ஒன்லைன் மூலம் நிதி வசூலிக்க முடிவெடுத்து தனது நிலையை அதில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமெரிக்க பாடகி Taylor Swift £23,373 பணம் கொடுத்து உதவியுள்ளார்.

மேலும் இது குறித்த அவரின் பதிவில், Vitoria, உங்களின் வாழ்க்கை கதையை நான் ஓன்லைனில் படித்தேன், இவ்வளவு கடினமான சூழலிலும் உங்கள் அர்ப்பணிப்பு என்னை ஈர்த்தது.

அதனால் இதை பரிசாக உங்களுக்கு தருகிறேன், குட் லக் என பதிவிட்டுள்ளார். Vitoriaவின் பதிவில் எனது கதை தனித்துவமானது அல்ல என்றாலும், கணிதவியலாளராக வேண்டும் என்பது எனது கனவாகும்.

என்னை ஊக்கப்படுத்தியவர்களுக்கு நன்றி, நான் பிரித்தானியாவுக்கு வரும் போது என்னால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என தெரிவித்துள்ளார்.