வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்.. திடீரென மார்பை பற்றிக் கொண்டு சரிந்து விழுந்து மரணம்!!

320

இந்தியாவில்..

இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ராஜா லோதி (20). இவர் மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்.

அதாவது, இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்கு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படித்த லோகி திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தார்.

அப்போது, அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர்.


இதில், இளைஞரின் மரணம் குறித்து சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.