திருப்பூர்…
வங்கியில் பணம் எடுக்க வரிசையில் நின்றிருந்த இளைஞர் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் அருண் குமார் (34). இன்று இவர்,
பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம் எடுப்பதற்காக வரிசையில் நின்றிருந்தார். அப்போது அவர், மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதை கண்டு அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள், அருண் குமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த பல்லடம் போலீசார், அருண் குமாரின் திடீர் உயிரிழப்பிற்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரித்து வருகின்றனர்.