வயிறுவலியால் துடித்த இளம்பெண்… அறுவைசிகிச்சை செய்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

426

வயிற்றுவலி….

வயிற்றுவலியால் அவதியுற்ற இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தியாவைச் சேர்ந்த ஸ்வீட்டி குமாரி (17) என்ற அந்த இளம்பெண்ணை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவருக்கு புற்றுநோய் இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள்.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றுக்குள்ளிருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

குமாரிக்கு முடியைக் கடிக்கும் பழக்கம் இருந்ததாம். அப்படி அவர் கடித்து விழுங்கிய முடி அவர் வயிற்றுக்குள் பல ஆண்டுகளாக சேர்ந்துகொண்டே வந்துள்ளது.


அப்படி சேர்ந்து சேர்ந்து, 7 கிலோ எடையுள்ள ஒரு பந்தாக மாறியிருக்கிறது, அவர் சாப்பிட்ட முடி மொத்தமும்.

ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த முடிப்பந்தை அகற்றிய மருத்துவரான Dr GN Sahu கூறும்போது,

தன் 40 வருட அனுபவத்தில் இப்படி ஒரு விடயத்தைப் பார்த்ததில்லை என்கிறார்.