வயிற்றைக் கீறி குழந்தை எடுக்கப்பட்ட நிலையில் கிடந்த கர்ப்பிணி: வெளியான அதிர்ச்சி பின்னணி!!

412

பிரேசில் நாட்டில் வயிறு கீறப்பட்டு, கர்ப்பத்திலிருந்த குழந்தை அகற்றப்பட்ட நிலையில் ஒரு பெண் இறந்து கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த Flavia Godinho Mafra (24) என்ற இளம்பெண்ணை அவரது பள்ளித்தோழி ஒருவர், வளைகாப்பு நடத்தலாம் என்று கூறி அழைத்துச் சென்ற நிலையில் Flavia வீடு திரும்பவில்லை.

Flaviaவைத் தேடிச் சென்ற அவரது கணவரும் தாயும், ஒரு இடத்தில், Flavia வயிறு கீறப்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

ஆனால், Flaviaவின் வயிற்றிலிருந்த குழந்தையைக் காணவில்லை. பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை Flaviaவின் தோழியும் தோழியின் கணவரும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.


விசாரணையில், தனக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதால், தோழியின் குழந்தையை திருட திட்டமிட்டு, அவருக்கு வளைகாப்பு நடத்துவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று, தன் கணவர் உதவியுடன் Flaviaவின் தலையில் கல்லாலடித்து காயப்படுத்தி,

வயிற்றைக் கீறி குழந்தையை திருடிக்கொண்டதாக ஒப்புக்கொண்டார் அந்த பெண்.

அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் Flaviaவின் உடல், உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.