விமான விபத்தில் இருந்து 26 வயது இளைஞனைக் காப்பாற்றிய அபராதம்! 5 நிமிடத்தால் தப்பிய உயிர்: நெகிழ்ச்சி தகவல்!!

796

துபாயில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்ட விமானத்தில் கிளம்பவிருந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞர் அபராதம் மற்றும் 5 நிமிட தாமதம் மூலம் இப்போது உயிரோடும் எந்த வித காயம் இல்லாமலும் இருக்கிறார்.

கேரளாவின் சொந்த ஊரான Kannur-ன் Mattannur-ஐ சேர்ந்தவர் Afzal KP. 26 வயது மதிக்கத்தக்க இளைஞர்ன் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணிக்க வேண்டியது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அபராதத் தொகை மற்றும் 5 நிமிட தாமதம் அவரைக் காப்பாற்றியுள்ளது.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்னுடைய பணிக்கான ராயல் விசா ஜுன் மாதத்தில் காலாவதியான பிறகு ஜுன் 10-ஆம் திகதிக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டிருந்தேன்.

ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணமாக என்னால் திட்டமிட்டபடி திரும்பி செல்ல முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் டிசம்பர் மாதம் வரை விசாரணை நீட்டிக்கலாம் என்று நினைத்தேன்.


அப்போது தான் வந்தே பாரத் மிஷின் மூலம் இந்த விமானம் கேரளாவிற்கு செல்வதை அறிந்தேன். இதற்காக பல நாட்கள் காத்திருந்து, கடந்த 7-ஆம் திகதி இதற்கான டிக்கெட்டைப் பெற்றேன்.

என்னுடைய சொந்த ஊருக்கு செல்வதில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தேன். ஒரு வருடத்திற்கும் மேலாக, பார்க்காமல் இருக்கும் நான் என் அம்மாவைப் பார்ப்பேன். அதுமட்டுமின்றி எனக்கு நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

நான் ஊருக்கு வந்தவுடன் திருமணம் திகதியும் குறிக்க திட்டமிட்டிருந்தனர். கடந்த 6-ஆம் திகதி நான் ஷார்ஜாவை அடைந்தேன், அடுத்த நாள் காலையில் துபாய்க்குச் செல்வதற்கு முன்பு அங்கேயே இருந்தேன்.

காலை 8:30 மணிக்கு, நான் விமான நிலையத்தில் இருந்தேன், உற்சாகமாகவும் தயாராகவும் இருந்தேன். கவுண்டரில் எனது இரத்த பரிசோதனை செய்தேன். எனது போர்டிங் பாஸ் கிடைத்தது, எனது இருக்கை எண் 18 சி என குறிப்பிடப்பட்டிருந்தது.

விமானம் பிற்பகல் 1:30 மணிக்கு என திட்டமிடப்பட்டது, நாங்கள் விமான நிலையத்தில் காத்திருந்தபோது, ​​தன்னுடன் இணை பயணியாக வந்த ஆயிஷா என்பவரின் லக்கேஜ்களை எடுத்து கொடுப்பதற்கு உதவினேன்.

இருப்பினும், குடிவரவு கவுண்டரில், நான் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஏனெனில் நான் இங்கு அதிக நட்கள் தங்கியதற்காக 1000 திர்ஹாம் அபராதம் நிலுவையில் இருப்பதாகக் கூறினர், நான் ஏறுவதற்கு முன்பு அதை அகற்ற வேண்டும்.

அபராதம் செலுத்துவதற்கு என்னிடம் போதுமான பணம் இல்லை, என்னிடம் கிட்டத்தட்ட 500 திர்ஹாமிற்கும் குறைவாகவே இருந்தது. காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை, பாஸ்போர்ட் கட்டுப்பாட்டில் நின்று, தன்னை ஏற அனுமதிக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டேன்.

அவர்கள் பணம் செலுத்தாமல் வெளியேறக் கூடாது என்று கூறினர். விமான நிலையத்தில் உள்ள சில ஏர் இந்தியா ஊழியர்கள் விமானம் புறப்படுவதற்கு இன்னும் சிறிது நேரம் இருப்பதால், மீதமுள்ள தொகையை எப்படியாவது ஏற்பாடு செய்து கொடுத்துவிடும் படி பரிந்துரைந்த்தனர்.

இதனால், மதியம் 1:15 மணியளவில் தான் தனது முந்தைய நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக (புரோ) பணிபுரியும் தனது நண்பரான இப்ராஹிம் அட்கருக்கு(Public Relations Officer (PRO)) போன் செய்தேன். அவர் என்னிடம் கவலைப்பட வேண்டாம், நான் விரைவில் ஒருவரிடம் பணம் கொடுத்து அனுப்புகிறேன் என்று கூறினார்.

இதையடுத்து அந்த நண்பர் சரியாக 1.30 மணிக்கு அடைந்த போது, நான் கவுண்டருக்கு சென்று பணம் செலுத்தினேன். அப்போது நான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட்டுவிட்டதாகவும், மிகவும் தாமதமாகிவிட்டதாகவும் தெரிவித்தனர். ஒரு 5 நிமிட தாமதத்தினால் அந்த விமானத்தை தவறவிட்டுவிட்டேன்.

இதையடுத்து இது குறித்து அம்மாவுக்கு தெரிவிப்பதற்கும், ஒரு வாரத்திற்கு பின்பு தான் வருவேன் என்று கூற முடிவு செய்தேன். அபுதாபி பாதுகாப்பு முகாமில் பணிபுரியும் எனது தந்தைக்கு நான் தகவல் கொடுத்தேன். என்னிடம் அதிக பணம் இல்லாததால், மற்றொரு சக ஊழியர் என்னை அழைத்துச் சென்று, என் சகோதரியின் வீட்டில் இறக்கிவிட்டார்.

அதன் பின் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு தூங்கிய பின்னர், எனக்கு தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. அப்போது நான் வர வேண்டிய விமானம் விபத்துக்குள்ளானது என்று கூற, நான் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன். நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன், நான் விமான நிலையத்தில் உதவ முயற்சித்த சக பயணிகளின் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன், அவள் நன்றாக இருக்கிறாள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.