விஷம் கலந்து ஜூஸ் குடித்து பிரபல பாடகி மரணம்!!

164

15 நாட்களுக்கு முன்பு போலங்கிரில் நடந்த படப்பிடிப்பில் ஒடிசாவை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்சானா பானோ (27) பங்கேற்றார்.

பின்னர் அவருக்கு jஜூஸ் வழங்கப்பட்டது. அதை குடித்துவிட்டு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் பவானிபட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆரம்ப சிகிச்சைக்குப் பிறகு, அவர் போலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் தொடர் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பாடகி ருக்ஸானா பானோ உயிரிழந்தார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ருக்ஸானா பானோவின் சகோதரி ரூபி பானோ கூறுகையில், ‘எனது சகோதரி ருக்ஸானா பானோவுக்கு மேற்கு ஒடிசாவை சேர்ந்த பாடகி ஒருவர் அவ்வப்போது மிரட்டல் விடுத்து வருகிறார்.


படப்பிடிப்பின் போது அவருக்கு கொடுத்த ஜூஸில் விஷம் கலந்திருக்கலாம். இதனால் 4 மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் சகோதரியை காப்பாற்ற முடியவில்லை.

மேலும் அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்றார். பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.