சென்னை நங்கநல்லூரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி வந்தார்.
அப்போது அந்த சிறுமி குடியிருப்பின் வாசலில் உள்ள கேட்டை திறந்து மூடினார். சிறுமி கேட்டை மூடியபோது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கேட் விழுந்ததில் படுகாயம் அடைந்த அந்த சிறுமி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிகிறது.
அடுக்குமாடி குடியிருப்பின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை நடத்திய அதிகாரிகள், சிறுமியின் மரணம் குறித்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதறவைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வீடியோவில் சிறுமியின் தந்தை இருசக்கர வாகனத்தை வீட்டிற்குள் கொண்டு சென்ற பின்னர், சிறுமி கதவை மூடும்போது, இரும்பு கதவு சிறுமியின் மீது நேரடியாக விழுந்தது பதிவாகியுள்ளது.
வீட்டின் பாதுகாப்புக்காக இரும்பு கேட் வைத்துள்ளார். அதன் செயல்பாடுகள் மற்றும் உறுதித்தன்மையை அவ்வப்போது சோதித்தித்துக்கொள்ள வேண்டும் எனம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.