வீட்டு வேலைக்காரரை காதலித்து திருமணம் செய்துகொண்ட கோடீஸ்வர பெண் : ஆச்சரியமான காரணம்!!

425

பாகிஸ்தானில்..

பாகிஸ்தானில் வசதி படைத்த பணக்கார பெண்ணொருவர் தனது வீட்டில் வேலை செய்யும் நபரை திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அவர்களின் சுவாரசியமான காதல் கதை குறித்து தெரியவந்துள்ளது.

இஸ்லாமாபாத்தை சேர்ந்தவர் நசியா. பணக்கார பெண்ணான இவருக்கு உறவினர்கள் என யாரும் இல்லை. இதையடுத்து பெரிய வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டு வேலைகளை செய்ய உதவியாளரை நியமிக்க முடிவு செய்த நிலையில் சிலர் சுபியான் என்ற நபர் குறித்து நசியாவிடம் சொன்னார்கள். இதையடுத்து சுபியானை மாதம் ரூ.18000 சம்பளத்திற்கு வீட்டு வேலையாளாக பணியில் சேர்த்தார் நசியா.


ஆனால் அப்போது நசியாவிற்கு தெரியவில்லை, சுபியான் தான் தனது வருகால காதல் கணவர் என்று! இந்த நிலையில் சுபியானை சமீபத்தில் நசியா திருமணம் செய்து கொண்டுள்ளார். பெரிய செல்வந்தரான அவர் சுபியானை திருமணம் செய்தது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நசியா கூறுகையில், சுபியானின் நல்ல நடத்தை, எளிமை, குணம் ஆகியவை எனக்கு அவர் மீது காதலை வரவழைத்தது. எனது பணம் மற்றும் அந்தஸ்தை கருத்தில் கொண்டு பல ஆண்கள் என்னை திருமணம் செய்ய அணுகினார்கள்.

ஆனால் சுபியானின் இயல்பு எனக்கு அவர் மீது ஈர்ப்பை கொடுத்தது. காதல் அந்தஸ்தையோ, நிறத்தையோ, செல்வத்தையோ, ஜாதியையோ பார்ப்பதில்லை. நான் என் காதலை சுபியானிடம் வெளிப்படுத்திய போது அவரால் அதை நம்ப முடியவில்லை.

உண்மையை சொன்னால், அதிர்ச்சியில் மயங்கியே விழுந்துவிட்ட்டார். பின்னர் மயக்கம் தெளிந்தபின்னர் என் காதலை ஏற்று கொண்டார். என் கணவருடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனக்கு சிறிது உடல்நிலை சரியில்லை என்றாலும் என்னை மிக அக்கறையோடு அவர் கவனித்து கொள்கிறார் என கூறியுள்ளார்.