வெந்தயக்கீரை என்று பக்கத்து வீட்டு பையன் கொடுத்த இலை…! உயிருக்கு போராடும் குடும்பம்! நடந்தது என்ன?

1061

உத்திர பிரதேசத்தில் கஞ்சா இலையினை சமைத்து சாப்பிட்ட குடும்பம் தற்போது உயிருக்கு போராடி வருவது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேசத்தில் மியாகன்ஞ் என்ற கிராமத்தில் கிஷோர் என்ற நபர் தனது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கு வெந்தயக் கீரை என்று சிலை இலைகள் அடங்கிய பாக்கெட் ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

பாக்கெட்டைப் பெற்றுக்கொண்ட அக்குடும்பத்தினர் கிஷோர் கூறியதை நம்பி, அந்த இலையினை வீட்டில் சமைத்து, உருளைக்கிழங்கு துவையலுடன் சாப்பிட்டுள்ளனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவருக்கும் தலைசுற்றல் ஏற்பட்டு மயங்கியுள்ளனர். உடனே அருகில் இருப்பவர்கள் பதறிப் போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.


குறித்த நபர்களை பரிசோதித்த மருத்துவர்கள் கஞ்சா இலைகளை சாப்பிட்டதைக் கண்டுபிடித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

கிஷோர் விளையாட்டிற்காக செய்த காரியம் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேரின் உயிருக்கு உலை வைப்பது போல் அமைந்து விட்டது. இதுகுறித்து அறிந்த போலீஸார் கிஷோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.