வெறும் கையால் நாகப் பாம்பை பிடித்த இளைஞன்..! அடுத்த நொடி அரங்கேறிய பகீர் சம்பவம்!

1073

கேரளாவில் வெறும் கையால் நாகப்பாம்பை பிடித்த இளைஞர் ஒருவரை பாம்பு கொத்தியதால் அவரது வாயில் நுரை தள்ளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் சாஸ்தவட்டோம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜாகிர் உசேன் என்ற இளைஞர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் ஹசீனா. இவருக்கு நேகா மற்றும் நிஹா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 11 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் இவர் இதுவரை 348 பாம்புகளை பிடித்து இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இத்தனை ஆண்டுகளில் இதுவரை 12 பாம்புகளால் இவர் கொத்தப்பட்டு பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜாகிர் உசேன், நாவைகுலம் என்ற பகுதிக்கு பாம்பு பிடிப்பதற்காக சென்றிருக்கிறார். அன்றைய தினம் இரவு பொழுது 8:30 மணி அளவில் ஜாகிர் தான் தேடி வந்த பாம்பை பிடிப்பதற்கு முயற்சி செய்து இருந்திருக்கிறார்.


அந்த பாம்பை ஜாகிர் தன்னுடைய கைகளால் பிடித்து தூக்கினார். அப்பொழுது அந்த நாக பாம்பு சீறிக்கொண்டு அவரை கொத்தியது. பாம்பு கொத்திய பின்பும் ஜாகிர் அசராமல் தாக்குப்பிடித்து நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று அவரது வாயிலிருந்து நுரை தள்ள ஆரம்பித்திருக்கிறது. அந்த சமயத்தில் அவரது கைகளில் இருந்த அந்த நாக பாம்பு தப்பி ஓடிவிட்டது. உடனே அச்சமடைந்த அவர் தன்னுடைய நண்பர் முகேஷ் என்பவருக்கு போன் மூலம் தகவல் அளித்திருக்கிறார். இதனையடுத்து முகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்கு முன்பாகவே ஜாகீர் மயங்கி கீழே விழுந்து இருக்கிறார்.

பின்னர் அவரை அங்கிருந்த மக்கள் அருகில் இருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஜாகிர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மற்றொரு பாம்பு பிடிப்பேன் பிடிப்பதில் மிகவும் அனுபவம் வாய்ந்த நபரான சுரேஷ் அந்த இடத்திற்கு வந்து ஜாகீர் தப்ப விட்ட பாம்பை பிடித்திருக்கிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.