வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற மனைவி.. தேடிச்சென்று கணவன் செய்த கொடூர செயல்..!

831

ஐக்கிய அமீரகத்தில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் நாயர். இவருக்கு வித்யா சந்திரன் என்கிற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர்.

இதையடுத்து, குடும்ப சூழ்நிலை காரணமாக வித்யா சந்திரன் துபாய்க்கு வேலைக்காக சென்றார். இவருடைய மகள்கள் 2 பேரும் கேரளாவில் உள்ளனர்.

தனது அம்மா ஓணம் பண்டிகைக்காக மீண்டும் வருவார் என்று மகள்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், வித்யா சந்திரன் வேலை பார்க்கும் இடத்துக்கு சென்ற சந்திரசேகரன் நாயர், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.


பின்னர் சில மணிநேரங்களிலேயே போலீஸாரிடத்தில் பிடிபட்ட அவர், துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், தன்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்ததால், கொலை செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், நீதிமன்றம், சந்திரசேகரன் நாயருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு ஜூலை 20 முதல் 15 நாட்களுக்குள் மேல்முறையீட்டுக்கு உட்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.