அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவி சொந்த ஊரில் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் குடும்பத்தார் அது தொடர்பில் அதிர்ச்சி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
உத்தரபிரதேசம் கவும்தம்புத்நகர் மாவட்டம் தாத்ரி என்ற பகுதியை சேர்ந்தவர் சுதிக்க்ஷா (20). இவர் ரூ.4 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவில் மேல் படிப்பு படித்து வந்தார்.
இப்போது கொரோனா காலம் என்பதால், வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று இவர் தன்னுடைய மாமா சத்யேந்தருடன் புலந்த்ஷெரில் உள்ள சொந்தக்காரர் வீட்டுக்கு சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது திடீரென விபத்து ஏற்பட்டு, வண்டியில் இருந்து கீழே விழுந்த சுதிக்ஷா படுகாயமடைந்து சாலையிலேயே உயிரிழந்தார்.
இது குறித்து சுதிக்ஷா குடும்பத்தார் கூறுகையில், பைக்கில் சுதிக்ஷா சென்றபோது, புல்லட்டில் 2 இளைஞர்கள் அவரை பின் தொடர்ந்து வந்திருக்கிறார்கள்.
அப்போது சுதிக்ஷாவை மோசமாக பேசி கேலி செய்துள்ளனர். ஆனால் அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் சுதிக்ஷா இருந்திருக்கிறார்.
இதனால் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக, அந்த 2 இளைஞர்களும் புல்லட்டிலேயே சாகசம் காட்டி இருக்கிறார்கள். பிறகு அருகில் வந்து மிரட்டியும் இருக்கிறார்கள், இதனாலேயே அந்த கவனம் சிதறி விபத்து ஏற்பட்டு உயிர் காவு வாங்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிசார் சரியாக விசாரணை நடத்தவில்லை எனவும் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதனிடையில் இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார், ஈவ் டீசிங் செய்த இளைஞர்களை தேடி வருகின்றனர்.