வெளியூருக்கு சென்ற கேப்பில் வேறொருவருடன் பழக்கம்.. காதலியை கொன்று நாடகமாடிய காதலன்!!

7

பெங்களூருவில் உள்ள HAL காவல் எல்லைக்குட்பட்ட குண்டலஹள்ளியைச் சேர்ந்தவர் இம்தாத் பாஷா (35). உஸ்மா கான் (30) HAL பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்குத் தெரிந்ததும், அவர்கள் அதை எதிர்த்தனர். இதன் பிறகு, அவர்கள் காதலை முறித்துக் கொண்டு, பெற்றோர் பார்த்தவர்களையே மணந்தனர்.

இருப்பினும், இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவாகரத்து செய்தனர்.

இம்தாத் பாஷா தனது மனைவியை விவாகரத்து செய்தார், உஸ்மா கான் தனது கணவரை விவாகரத்து செய்தார். பின்னர், இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர்.

விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில், கடந்த டிசம்பர் மாதம், இம்தாத் பாஷா வேலைக்காக மும்பை சென்றார். அந்த நேரத்தில், உஸ்மா கான் மற்றொரு இளைஞருடன் பழகினார்.

அவரை காதலித்த உஸ்மா கான், அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இது இம்தாத் பாஷாவுக்குத் தெரியவந்தது. பெங்களூரு திரும்பிய பிறகு, திருமணம் பற்றி பேச உஸ்மா கானை தனது வீட்டிற்கு அழைத்தார்.


பின்னர் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு அதிகரித்ததால் கோபமடைந்த இம்தாத் பாஷா, உஸ்மா கானை கொலை செய்தார்.

பின்னர், இம்தாத் பாஷா, மற்றவர்களை நம்ப வைப்பதற்காக, எங்கள் முதல் மனைவி எங்கள் காதலை நிராகரித்ததால் நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று இருவரின் உறவினர்களுக்கும் செல்போன்களில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

அவரும் விஷம் குடித்தது போல் நடித்தார். உறவினர்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த எச்ஏஎல் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது.

இம்தாத் பாஷா விஷம் குடிப்பதற்கு முன்பே உஸ்மா கான் இறந்துவிட்டார் என்பது தெரியவந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார், இம்தாத் பாஷாவை கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, ​​உஸ்மா கான் வேறொருவரை திருமணம் செய்ய முயற்சித்ததால் கோபத்தில் அவரை கழுத்தை நெரித்து கொன்றதாகவும், தற்கொலை செய்ய திட்டமிட்டது போல் நடித்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இம்தாத் பாஷாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.