தமிழகத்தில் இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியை சேர்ந்த ஸ்டீபன். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது இராணுவ வீரர் ஸ்டீபன் லடாக் எல்லையில் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள ஸ்டீபன் வீட்டுக்குள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.
பின்னர் ஸ்டீடனின் தாய் மற்றும் மனைவியை கொள்ளையர்கள் கொலை செய்துள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்த நகைகளை திருடி சென்றுள்ளதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு மோப்ப நாயுடன் விரைந்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சிவங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.