காலை எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவில் தூங்கப்போவது வரை ரீல்ஸ் மோகம் தான். இன்றைய இளசுகள் எந்த இடத்தையும் விட்டுவைப்பதில்லை. அது நடு சாலையோ, துக்கவீடோ எதுவாக இருந்தாலும் வீடியோ பதிவிட்டு ஷேர், லைக்ஸ் வாங்குவது தான் ஒரே குறி எனலாம்.
இன்னும் சிலர் இதற்காக பல ஆபத்தான விபரீத விளையாட்டுக்களில் இறங்குவதும் உண்டு. பைக் வீலிங் சாகசம், அருவியில் மேலிருந்து குதித்தல் என சாகசங்களில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கிக் கொள்வதும் உண்டு. இந்த ரீல்ஸ் செயல்பாடுகள் தற்போது எல்லைமீறி நடப்பது தொடர்கதையாகி வருவதை தடுக்க தனிமனித கட்டுப்பாடு அவசியம்.
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு கையில் மொபைல் இருப்பவர்கள் அனைவருமே யூடியூபர்கள் தான். இவர்கள் ரீல்ஸ் பதிவிட்டு சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகின்றனர்.
யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தினசரி ரீல்ஸ் எனப்படும் வீடியோ பதிவிடுபவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருந்து வருகிறது.
இவர்களில் ஒருசிலர் கேளிக்கையான மற்றும் மக்கள் முகம்சுளிக்கும் வகையிலான செயல்களை செய்து, அதன் மூலம் மக்களிடம் பிரபலமாக நினைப்பவரும் பலர்.
யூடியூப் வீடியோ எடுப்பவர்கள் அடிக்கும் கூத்து பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் என தொடர்ந்து வந்தது. தற்போது இளம்பெண் ஒருவர் விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை அனுப்பும் அமைப்பில் படுத்துக்கொண்டு வருகிறார்.
இது போன்ற ரீல்ஸ் எடுத்து வீடியோ பதிவிட்டுள்ளார். இது குறித்து நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
The virus has reached the airports too
pic.twitter.com/RdFReWtWjH
— desi mojito
(@desimojito) March 29, 2024