ஹனிமூன் சென்ற தம்பதி.. நீண்ட நேரமா திறக்காமல் இருந்த ஹோட்டல் அறை : உள்ள போய் பாத்ததும் அதிர்ந்து போன ஊழியர்!!

751

அமெரிக்கா..

அமெரிக்காவிலுள்ள டென்னசி மாகாணத்தை சேர்ந்தவர் பிரிட்லி ராபர்ட் டாசன்(39). இவருக்கும் கிரிஸ்டி சென் என்ற இளம்பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இருவரும் கடந்த 7ம் தேதி ஃபிஜி நாட்டிலுள்ள ட்ரூட்லி என்ற தீவுக்கு தேனிலவுக்காக சென்றுள்ளனர். அங்கே ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கிய இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியின் தலையில் பலமாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


இதனால் அதிர்ச்சியடைந்த ராபர்ட், அவரது அறையின் கதவை திறக்கவே இல்லை. இப்படி அதிக நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாகம், வேறு சாவியை கொண்டு அந்த அறையை திறந்துள்ளனர்.

அப்போது கிரிஷ்டினா பிணமாக கிடந்ததை கண்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வேறு இடத்திற்கு தப்பி சென்ற ராபர்ட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.