ஹோட்டலில் பயங்கரம்…16 வயது சிறுமி சீரழித்த 30 பேர் கொண்ட கும்பல்! நாட்டையே உலுக்கி வரும் சம்பவம்!!

409

இஸ்ரேலில் 16 வயது சிறுமி 30 ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் கரையோர ரிசார்ட்டான Eilat-ல் கடந்த வெள்ளிக் கிழமை 16 வயது சிறுமி 30 ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்டார்.

ஹோட்டல் அறையில் குடி போதையில் குறித்த இளைஞர்கள் சிறுமியை பலமுறை வன் கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை இரண்டு பேரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu, இது சிறுமிக்கு எதிரான குற்றம் மட்டுமல்ல, இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறியுள்ளார்.


Times of Israel வெளியிட்டுள்ள செய்தியின் படி, நிறைய பே கொண்ட ஆண்கள் குழு சிறுமியுடன் உடல் அளவில் நெருக்கமாக இருந்ததாக கொண்டதாக புலனாய்வாளர்களிடம் கூறியுள்ளார். சில ஆண்கள் இந்த சம்பவத்தை தங்கள் தொலைபேசிகளில் தாக்குதல்களை படமாக்கி வைத்துள்ளதாக இஸ்ரேலிய செய்தித்தாள் Haaretz தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் இப்போது சிறுமியின் மருத்துவ பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள், அதே நேரத்தில் ஒரு நபர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் வடக்கு இஸ்ரேலைச் சேர்ந்த 27 வயதுடையவர் என்றும், இரண்டாவது சந்தேக நபர் 27 வயதானவர் என்றும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும் 16 வயது சிறுமி 30 பேர் கொண்ட கும்பல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.