10 கிரெடிட் கார்டுகள் மூலம் தனியார் ஊழியரிடம் 1 கோடி மோசடி செய்த தம்பதி!!

47

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால்பண்ணை காலனி பகுதியில் வசித்து வருபவர் 37 வயது தனசேகர். இவர்காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் நான் சென்னை காரப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து வருகிறேன். அதே நிறுவனத்தில் மேலாளராக பணிபுரியும் சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த மோகனபெருமாள் (42) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (37) இருவரும் எனக்கு நண்பர்களாகினர்.

இவர்களது உறவுப் பெண்ணின் திருமணத்திற்காக 115 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகள் கொடுக்க வேண்டும் என என்னிடம் உதவி கேட்டனர். இதில் என்னுடைய 10 கிரெடிட் கார்டுகள் மூலம் ரூ.1.07 கோடி வரை தங்க காயின்கள் வாங்கினர்.

இதனையடுத்து வங்கிக் கணக்கு மூலம் மூலம் ரூ.43,89,972 பணத்தை கொடுத்த தம்பதி, மீதி பணம் ரூ.63,74,080ஐ கேட்ட போது தர முடியாது என என்னை ஏமாற்றிவிட்டனர்.

என்னிடம் பண மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் மோகனபெருமாள் (42) மற்றும் அவரது மனைவி ஸ்ரீதேவி (37) இருவரையும் நேற்று போலீசார் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.