100 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட முக்கிய கடிதம்: இணையத்தில் பகிர்ந்த கனேடிய பெண்!

379

கனேடிய பெண்………..

கனேடிய பெண் ஒருவருக்கு அவரது பூட்டியார் (பாட்டியின் தாய்), 1918ஆம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. Lindsay Doran-Bonk என்ற அந்த பெண்ணுக்கு, 100 ஆண்டுகள் பழமையான அந்த கடிதம் கிடைத்தபோது, அதன் அருமை தெரியவில்லை.

Marion Elizabeth “Bessie” Forester என்னும் அந்த பூட்டியார், 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ என்னும் தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் அந்த கடிதத்தை எழுதியிருந்தார்.

நம்மைப் போலவே Lindsayக்கும் கொள்ளைநோய் என்பதன் பயங்கரம் தெரியாததால், அதை தனது அலமாரியில் வைத்திருந்தார் அவர். இந்த கொரோனா என்னும் கொள்ளைநோய் பரவத் தொடங்கி உலகமே பதறியபோதுதான், 1918இலும் இதேபோன்ற ஒரு நிலைமையில்தான் தன் பூட்டியார் அந்த கடிதத்தை எழுதியிருப்பார் என்ற எண்ணம் உருவானது Lindsayக்கு.

மீண்டும் அந்த கடிதத்தை வாசிக்க வாசிக்க, அந்த ப்ளூ தொற்றுநோய் பரவிய காலத்தில், ஒரு கர்ப்பிணியாக, கைகளால் செய்யப்பட்ட மாஸ்குகளை அணிந்துகொண்டு, ஏற்கனவே பிறந்த குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, கணவனுடன் ஊர் ஊராக அலைந்து திரிந்த பயங்கரம் புரியவந்தது Lindsayக்கு.


இந்நிலையில் Marionக்கும் ப்ளூ தொற்றிக்கொள்ள, குழந்தை ஒன்றை பெற்றுவிட்டு, சில வாரங்களுக்குப்பின், தனது 27ஆவது வயதில் பெரிதாக எதையும் அனுபவிக்காமலே இவ்வுலகை விட்டுப் பிரிந்துள்ளார் அவர். நெகிழ்ந்துபோன Lindsayக்கு பூட்டியார் மீது திடீர் பாசம் ஏற்பட, அந்த கடிதம் குறித்த விடயங்களை இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் அவர்.

அந்த கடிதம் கண்ட பலர், Lindsayயின் பூட்டியாரை அறிந்தவர்கள், அதாவது அவரது தூரத்து உறவினர்கள், Lindsayயை தொடர்புகொண்டிருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து இப்போது பேஸ் புக் குரூப் ஒன்றை துவங்கி அளவளாவிக்கொண்டிருக்கிறார்கள்.

தனது பூட்டியார் Marion 27 வயதில் இறந்துபோனார் என்றாலும், அவர் இவ்வளவு பெரிய ஒரு சந்ததியை விட்டு விட்டுத்தான் சென்றுள்ளார் என்பதில் தனக்கு மகிழ்ச்சி என்கிறார் Lindsay.