11 ஆண்டுகளாக காதல்! சகோதரியை திருமணம் செய்து கொள்ளும் இளைஞன்… வெளியான புகைப்படங்கள்

471

போர்ச்சுகலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் வீரர் Miguel Oliveira தனது ஒன்றுவிட்ட உடன் பிறந்த சகோதரியை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.

Miguel Oliveira என்ற 25 வயதான இளைஞன் மோட்டார் சைக்கிள் வீரராக உள்ளார். இவரும் Andreia Pimenta என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

இதில் ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒரு விடயம் உள்ளது. அதாவது Oliveiraவுக்கு Andreia சகோதரி ஆவார். ஆம், Oliveira தந்தையின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகள் தான் Andreia.

Oliveiraவும், Andreia வும் கடந்த 11 ஆண்டுகளாகவே காதலில் இருந்து வந்துள்ளனர்,


ஆனால்குடும்பம் மற்றும் சகோதர பிணைப்பு காரணமாக தங்களின் உறவை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு இருவரும் ஆளாக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது Oliveira, Andreiaஐ திருமணம் செய்து கொள்ள இருப்பதாக உலகிற்கு அறிவித்துள்ளார், விரைவில் அவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனிடையில் தனது வாழ்க்கைக்கான பெண்ணை Oliveira மணந்து கொள்ளவுள்ளது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக அவரின் தந்தை கூறியுள்ளார்.