அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ் ராஜூ மற்றும் சரிதா ராமராஜூ தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இப்படி மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமணம் வாழ்வில், கடந்த 2018 ல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து செய்துள்ளனர்.
எனவே, தங்களது 11 வயது குழந்தை யாரிடத்தில் வளர வேண்டும் என்பது குறித்து வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.
நீதிமன்ற தீர்ப்பின்படி, இவர்களின் மகன் தந்தையிடம் வளர்க்கப்பட வேண்டும் எனவும், விரும்பும்போது தாயுடன் சில நாட்கள் இருக்க அனுமதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதனால், குழந்தை தந்தையிடம் வளர்ந்து வந்தார். இதன்படி, வர்ஜீனியாவில் வசித்து வந்த சரிதா சமீபத்தில் 11 வயது மகனை சரிதா ராமராஜு வீட்டிற்கு அழைத்து வந்து அங்கிருந்து டிஸ்னிலேண்டுக்கு சுற்றுலாவாக அழைத்துச்சென்றார்.
கலிபோர்னியாவின் சாண்டாஅனாவில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து சென்றார்.
இதற்காக அங்குள்ள ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு 3 நாட்கள் தங்கியிருந்த நிலையில் புறப்பட வேண்டிய நேரத்தில் மகனின் கழுத்தில் தாய் கத்தியால் குத்திக்கொலை செய்தார்.
மகனைக்கொன்று விட்ட பதற்றத்தில் தற்கொலை செய்வதற்காக தானும் ஏதோ ஒரு மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக்கொண்டார். இதன் பின் விடுதி நிர்வாகத்திற்கு தொலைபேசியில் அழைத்து நடந்ததை சரிதா ராஜு கூறினார்.
விடுதி நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்கு பின் சரிதா வீடு திரும்பியுள்ளார். சிறுவனின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சரிதா ராமராஜு மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவருக்கு 26 ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தான் பெற்றெடுத்த பிள்ளை தன் கூடவே வசிக்கவே தாய் விரும்பியதாகவும் ஆனால் நீதிமன்ற ஆணைப்படி தந்தையிடம் ஒப்படைக்கவேண்டிய கட்டாயத்தில் ஏற்பட்ட வெறுப்பில் இக்கொலையை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.