12 மணி நேரம் ரத்தக்களரியான பிரித்தானிய நகரம்: ஸ்தம்பித்த பொதுமக்கள்…!

409

பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் 12 மணி நேரத்தில் 6 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பர்மிங்காமில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு முன்பு சுமார் 15 பேர் கொண்ட கும்பலுக்கு இடையே நடந்த ஒரு மோசமான கைகலப்பில் நான்கு பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.

இச்சம்பவத்தை அடுத்து, 6 மணி நேரம் கடந்த நிலையில் ஒரு சிறிய சந்தைக்குள் கத்தியுடன் புகுந்த நபர், பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கி முனையில் அந்த நபரை கைது செய்துள்ளனர்.


அதே நாள் மதியம் வாகன சாரதிகள் இருவருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் கழுத்திலும் கையிலும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

மாலை சுமார் 5 மணியளவில் மார்பில் கத்திக்குத்து காயங்களுடன் மரணமடைந்த நிலையில் சாலை ஓரத்தில் இருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரங்கள் தொடர்பில் மூன்று ஆண்கள் மற்றும் 15 வயது பெண் உட்பட 5 பேர் பொலிசாரால் கைதாகியுள்ளனர்.