12 வயது மகனை கொரோனா சோதனைக்கு அழைத்து சென்ற தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி!!

880

பிரித்தானியாவை சேர்ந்த தாய் ஒருவர் தன் மகனுக்கு கொரோனாவாக இருக்கலாம் என்று பரிசோதனைக்காக சென்ற போது, அங்கு அவரின் மகனுக்கு வந்திருக்கும் நோய் குறித்து மருத்துவர்கள் சொன்னதைக் கேட்டு கடும் அதிர்ச்சியில் உள்ளார்.

பிரித்தானியாவின் Durham-ன் Darlington பகுதியைச் சேர்ந்தவர் Cody Lockey. 12 வயதான இவருக்கு சமீபத்தில் காய்ச்சல், உடல் வலி மற்றும் சளி பிடித்துள்ளது போல் இருந்துள்ளது.

இதனால் இவரின் தாய் Lisa Marie இது கொரோனாவாக இருக்கலாம் என்ற பயத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர்களிடம் Cody Lockey இடுப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வலியை உணர்ந்ததாக கூறியுள்ளார்.

அதன் பின் கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவு செய்யப்பட்ட பின்னர், உண்மையான காரணம் என்ன என்பது குறித்து அறிந்த போது, அவரின் தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.


ஏனெனில், Cody Lockey-வுக்கு lymphoblastic leukaemia எனப்படும் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் கொரோனா போன்ற நோயின் அறிகுறிகளான சோர்வு, எலும்பு வலி மற்றும் காய்ச்சல் ஆகியவை இருக்குமாம். கடந்த செவ்வாய் கிழமை இவரின் குடும்பத்தினர் Newcastle’s Royal Victoria மருத்துவமனைக்குச் சென்றபோது இந்த நோய் இருப்பதை உறுதி செய்தனர்.

இது குறித்து அந்த சிறுவனின் அத்தை எனப்படும் Nicola Ann Cook கூறுகையில், அவள் தன் மகனுக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது, கடந்த மூன்று நாட்களாகவே இடுப்பு பகுதியில் வலி இருப்பதாக அவரது மகன் மருத்துவரிடம் கூறினான். அதுமட்டுமின்றி, அவரின் உடல் நிலை அறிகுறிகள் அனைத்தும் கொரோனாவின் அறிகுறிகள் போன்று இருந்தன.

இதன் காரணமாகவே கொரோனா பரிசோதிக்க சென்ற இடத்தில், அது ரத்த புற்றுநோயாக வந்தது. இதைக் கேட்டு அவள் அதிர்ச்சியைந்தாள். சிறுவனின், எலும்பு மஜ்ஜையில் புற்றுநோய் செல்கள் நிறைந்துள்ளன. இது வேறு எங்கும் பரவவில்லை. அவருக்கு கடுமையான ரத்த புற்றுநோய் உள்ளது.

இரத்த அளவு மிகவும் குறைவாக உள்ளது, எனவே அவருக்கு இரத் தமாற்றம் இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அவனுக்கு கீமோதெரபியைத் தொடங்கப்பட்டது. அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சை பலன் அளிக்கும் வரை மருத்துவமனையில் இருப்பார்.

சிறுவனின் அத்தையான அவரின் சொந்த மகள் 32 வயதில் புற்று நோயால் இறந்தார். இதனால் அவருக்கு இந்த மனவேதனை புரியும். புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு Cee-Jay(10) மற்றும் Mia(13) என இரண்டு பேர் உடன் பிறந்தவர்கள். இந்தச்

அதுமட்டுமின்றி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று கூறப்படுவதால், எலும்பு மஜ்ஜை தானம் செய்யும் நபரை எதிர்நோக்கி காத்திருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.