13 வயது சிறுமியை சீரழித்த 60 வயது நபர்! பணத்திற்காக தாயின் கொடூர செயல்: விசாரணையில் அதிர்ச்சி!!

469

தமிழகத்தில் பெற்ற தாயே பணத்திற்காக 13 வயது மகளை 60 வயது எம்.எல்.ஏவிடம் அழைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் அடுத்த கோட்டாரை சேர்ந்த 15 வயது சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய காதலனுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு காணமல் போயுள்ளார். இதனால், அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில், பொலிசார் அவர்களை தேடி வந்தனர்.

அப்போது குறித்த சிறுமி மற்றும் அவருடைய காதலனை பொலிசார் கண்டுபிடித்து விசாரித்த போது, அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தன்னை பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து பொலிசார் தலைமறைவாக இருந்த நாஞ்சில் முருகேசனை பிடிக்க, தனிப்படைகள் அமைக்கப்பட்டு, இறுதியில் கைது செய்யப்பட்டார். காணமல் போன சிறுமியை பொலிசார் கண்டுபிடித்த போது, அவர்கள் பெற்றோரிடம் சிறுமியை ஒப்படைக்கவில்லை. மாறாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று, அங்கு வைத்து விசாரித்துள்ளனர்.


அப்போது அந்த சிறுமி, தன்னை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டாம் என்று கதறி அழுதுள்ளார். கடந்த 2 வருடத்திற்கு முன்பு, 2017-ஆம் ஆண்டு பெற்ற மகளை அவர்கள் முருகேசனிடம் அழைத்து சென்றுள்ளனர்.

பணத்திற்காக அவர் இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள். 60 வயது இருக்கும் முருகேசனுக்கு 2 வருடத்திற்கு முன்பு என்றால், சிறுமிக்கு அப்போது 12 அல்லது 13 வயது தான் இருக்கும்.

முருகேசன் மட்டும் சிறுமியை சீரழிக்காமல், தன்னுடைய நண்பர்களுக்கும் விருந்தாக்கியுள்ளார். இதை சொல்லி அந்த சிறுமி, என் அம்மாவிடம் மட்டும் என்னை அனுப்பாதீர்கள் என்று பொலிசாரிடம் கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், சிறுமியின் தாய் , பால், அசோக்குமார், கார்த்திக் போன்ற 4 பேரை கைது செய்தனர். நாஞ்சில் முருகேசனுக்கு அந்த சிறுமியின் அம்மாவுடனும் தொடர்பு இருந்துள்ளது. தான் கெட்டு போனதும் இல்லாமல், பெற்ற மகளையும் பணத்திற்க்காக கொண்டு வந்து 60 வயது நபரிடம் குழந்தையை விட்டு சென்றிருக்கிறார்.

இந்த பாலியல் கும்பலிடம் சிறுமி தவித்து சிக்கியிருக்கிறாள். அந்த பிடியில் இருந்து தப்ப முடியாமல் தவித்தபோது, அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்.

சிறுமியின் முழு வாக்குமூல அறிக்கையை குழந்தைகள் நலக்குழுவினர் கலெக்டருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். கலெக்டரும், எஸ்பியும் இது சம்பந்தமாக ஆலோசனை நடத்தி, சென்னை டிஜிபி அலுவலகம், மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.

இதன் பிறகு தான் முருகேசன் கட்சியில் இருந்து தூக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் வன்கொடுமையில் ஈடுபட்டதால், நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, பிறகு, 5 தனிப்படைகள் அமைத்து, தோட்டத்தில் பதுங்கி கொண்டிருந்த முருகேசனை நேற்று கைது செய்தனர்.. ஆனால், அவருக்கு திடீரென நெஞ்சு வலி வந்துவிட்டதாக கூற, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்து பார்த்த போது, அங்கு பிரஷர் அதிகமாக இருப்பதாக சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முருகேசன் தப்பி விடக் கூடாது என்பதற்காக அங்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.