13 ஆயிரம் சம்பளம்.. BMW கார்.. காதலிக்கு 4 BHK வீடு பரிசு.. பகீர் கிளப்பிய நபர்.. அதிர்ந்த போலீசார்!!

142

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜிநகரில் விளையாட்டு வளாகம் செயல்பட்டு வருகிறது. ஹர்ஷ் குமார் ஷீர்சாகர் அரசு சார்பில் ஒப்பந்த தொழிலாளி. அந்த அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

அவருக்கு மாதம் ரூ.13,000 சம்பளம்.இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக பிஎம்டபிள்யூ காரை வாங்கி அதில் சுற்றித் திரிந்துள்ளார்.

அவர் தனது காதலிக்கு 4 BHK வீட்டை பரிசாக அளித்துள்ளார். இதை பார்த்து சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தனது வசதிகளை மேலும் அதிகரித்து வருகிறார்.

இதனால் சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்படி, சக ஊழியர் ஒருவருடன் சேர்ந்து,

21 கோடி ரூபாய் அரசு நிதியை மோசடி செய்து, பெற்ற பணத்தை வைத்து, சாகர், சொகுசு வாழ்க்கை நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விளையாட்டு வளாகத்தின் பழைய லெட்டர்ஹெட்டைப் பயன்படுத்தி வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பினார். அதில், விளையாட்டு வளாகத்தின் கணக்குடன் இணைக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியை மாற்றுமாறு கோரியிருந்தார்.


பின்னர், விளையாட்டு வளாகத்தின் கணக்கின் அதே முகவரியுடன் புதிய மின்னஞ்சல் கணக்கைத் திறந்தார். அந்த மின்னஞ்சல் முகவரி இப்போது விளையாட்டு வளாகத்தின் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதை பயன்படுத்தி ஹர்ஷல் வங்கி பரிவர்த்தனை செய்தார். இதன் மூலம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை 13 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.21.6 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தப் பணத்தைப் பயன்படுத்தி ரூ.1.2 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார், ரூ.1.3 கோடி மதிப்புள்ள எஸ்யூவி, ரூ.32 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ பைக் வாங்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், தற்போது பணம் பறிக்க பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

ஹர்ஷலை கைது செய்ய போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்ட சாகருடன், யசோதா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ஜீவன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடந்து வருகிறது.