மலேசியாவில் 14 வயது சிறுவன் ஒருவனை முதலை ஒன்று காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
Ricky Ganya (14) என்ற அந்த சிறுவன் நதியில் நத்தைகளை சேகரிக்கச் சென்றபோது, முதலை ஒன்று அவனது காலைக் கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
தகவலறிந்த மீட்புக்குழுவினரால் 4.5 மீற்றர் நீளமுள்ள அந்த முதலையை ஐந்து நாட்களுக்குப் பின்னர்தான் பிடிக்க முடிந்தது. அவர்கள் அந்த முதலையின் வயிற்றைக் கிழித்துப் பார்த்தபோது, அந்த சிறுவனின் உடைகள் மற்றும் உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது.
அந்த உடல் பாகங்கள் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. பின்னர் அவனது குடும்பத்தினர் முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்காக அந்த உடல் பாகங்களை பெற்றுச் சென்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.