அமெரிக்கா…
அமெரிக்காவின் பள்ளி சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட வயதான பெண் ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் விதித்துள்ளது.
இந்த சம்பவம் பற்றிய முழு விவரம் வருமாறு:- அமெரிக்காவில் உள்ள வின்கான்சின் மாகாணத்தில் மோனரோ கவுண்டி உள்ளது. அங்குள்ள பள்ளி ஒன்றில் கடந்த 2016-17 ஆம் ஆண்டு கால கட்டத்தில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஆன்னி நெல்சன் கோச்.
தற்போது 74-வயது ஆகும் இந்த பெண் ஆசிரியை தனது 67 வயதில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளனார். அதாவது கடந்த 2016-2017 ஆம் ஆண்டு கால கட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்த போது,
தனது பள்ளியில் படித்து வந்த சிறுவன் மீது இவருக்கு விபரீத எண்ணம் ஏற்பட்டுள்ளது. 14-வயதே ஆன சிறுவன் என்று கூட பாராமல் தனது பாலியல் ஆசைக்கு சிறுவனை நெல்சன் கோச் பயன்படுத்தியிருக்கிறார்.
பள்ளி கட்டிடத்திற்கு கீழே பலமுறை சிறுவனுடன் ஆசிரியை நெல்சன் கோச் பாலியல் உறவு வைத்துள்ளார். சுமார் 25 தடவை அவர் உறவு வைத்து இருக்கிறார்.
இந்த சம்பவம் சிறுவனின் குடும்பத்திற்கு தெரியவந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, ஆசிரியருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நெல்சன் கோச் குற்றம் செய்ததை உறுதி செய்தது.
இது தொடர்பான வழக்கு 3 தினங்களாக மிகவும் பரபரப்புடன் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாதங்கள் நடந்தது. நெல்சன் கோச் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதும் அவருக்கான சிறை தண்டனையை நீதிபதி அறிவித்தார். 25 முறை பாலியல் உறவு கொண்டதாக முன் வைத்த குற்றசாட்டிலும் அவர்து குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் அதே தவறை செய்த பெண் ஆசிரியைக்கு 600 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி அதிரடியாக அறிவித்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், சிறுவன் உண்மையை தெரிவித்தான். அதை நீதிபதி தெளிவாக கேட்டுக்கொண்டர். உண்மையை கண்டுபிடிக்க நீதிபதி கடுமையாக மெனக்கட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
இதற்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்று வழக்கறிஞர் ஸ்கைல்ஸ் கூறினார். மேலும், நெல்சன் கோச் தண்டனை கிடைக்கும் வரை அதாவது வரும் அக்டோபர் 27 ஆம் தேதி சிறையிலேயே அடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டர். ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ஜிபிஎஸ் கண்காணிப்புடன் அவரை விடுவிக்கலாம் என்றும் உத்தரவிட்டது.