15 நாட்களுக்கு முன்னர் தான் அப்பா ஆனார்..! குழந்தை முகத்தை கூட பார்க்கவில்லை..! கதறி அழும் ராணுவ வீரரின் மனைவி..!

989

பிறந்த கைக்குழந்தையை பார்க்காமலேயே ராணுவ வீரர் தன் இன்னுயிரை நாட்டுக்கு ஈந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய-சீன எல்லைப்பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பிறந்து 15 நாட்களே ஆன குழந்தையை பார்க்காமலேயே உயிரிழந்த சம்பவமானது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாகவே இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு முக்கிய இராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றனர். தங்களுடைய எல்லைக்கு அருகிலுள்ள ராணுவ தளத்தில் 66 முக்கியமான சாலைகளை இந்தியா நிர்மாணித்து வந்ததால் சீனா கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரு நாட்டு போர் வீரர்களும் தாக்குதல் நடத்தியதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.


நேற்றிரவு இந்திய மக்களுக்கு மேலும் ஒரு துயரமான செய்தி வெளியானது. உயிரிழந்த 3 ராணுவ வீரர்கள் உள்பட மேலும் 17 வீரர்கள் உயிரிழந்ததாக இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டது. உயிரிழந்த 3 ராணுவ வீரர்களில் ஒருவர் குந்தன் குமார் ஓஜா.

இவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ரான்ஞ்சியில் இருந்து 440 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திஹாரி என்ற கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். 2011-ம் ஆண்டில் இவர் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். இவருக்கு 2018-ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இவருடைய மனைவியின் பெயர் நமீதா தேவி.

இந்நிலையில் 15 நாட்களுக்கு முன்னர் நமிதா தேவி அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். அன்றுதான் ஓஜா இறுதியாக தன்னுடைய குடும்பத்தினருடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது நிச்சயமாக எல்லையில் பதற்றம் ஓய்ந்த பிறகு விடுமுறை கேட்டு மக்களை பார்க்க வருவதாக மனைவியிடம் உறுதியளித்துள்ளார். ஆனால் அந்த உறுதியானது வாழ்நாள் முழுவதிலும் நிறைவேறாத வகையில் லடாக் பகுதியில் நடைபெற்ற அத்துமீறிய தாக்குதலில் குந்தன் குமார் ஓஜா உயிரிழந்ததாக மத்திய அரசு செய்தியை வெளியிட்டது.

இந்த செய்தியை கேட்டவுடன் அவருடைய குடும்பத்தினர் மீளாத்துயரில் மூழ்கியுள்ளனர். இந்த செய்தியானது நாட்டு மக்கள் அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.