15 மாதக் குழந்தையை நீரில் தூக்கிவீசிய கொடூர தாய் : நடந்த விபரீதம்!!

333

கர்நாடகா…

கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம், பனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம்மா (21). இவர் இன்று காலை துணி துவைக்க செல்வதாக கூறி அருகில் உள்ள கனவா நீர்த்தேக்கத்துக்கு தனது 15 மாத ஆண் குழந்தை தேவராஜூடன் சென்றார்.

இந்நிலையில், மாலையில், குழந்தை தேவராஜ், நீரில் தவறி விழுந்து விட்டதாக பாக்கியம்மா அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார். அந்த பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, பாக்கியம்மா முன்னுக்குப் பின் முரணான தகவல்களைத் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பாக்கியம்மா தனது குழந்தையை நீரில் தூக்கி வீசி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் குழந்தையை ஏன் கொலை செய்தார் என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.


ஆனால், தகாத தொடர்பில் இந்த குழந்தை பிறந்ததால் நீரில் வீசி கொலை செய்திருக்கலாம் என போலீஸார் தரப்பி்ல் தெரிவித்துள்ளனர். பெற்ற குழந்தையை நீரில் வீசி தாயே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.